Saravanan, Raju (2013) வாய் முதலா? வட்டக்குதம் முதலா? திண்ணை : தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை.
|
Text
வாய் முதலா_ வட்டக்குதம் முதலா-திண்ணை.pdf Download (270kB) | Preview |
Abstract
பல்லுயிரி வள ஆராய்ச்சியில் (Biodiversity research) இருப்பதால் வகைபாட்டியியல் (taxonomy) எந்தளவுக்கு முக்கியம் என்பது உணரும் சந்தர்ப்பம் எப்பொழுதும் எனக்கு கிடைப்பதுண்டு. பெரும்பாலோனோர் வகைபாட்டியியல் படிப்பதை ஒரு சம்பிரதாயமாகவே வைத்துள்ளனர். கல்லூரிகளில் வகைபாட்டியியல் படிப்பும் tree of life தொடங்கி நடத்தப்படுவதேயில்லை. முக்கியமான பரிணாம வளர்ச்சியின் அடிப்படைகள் இதனாலே பல நேரம் புரிபடாமல் போகிறது. உலகில் உள்ள 99 சதவீத உயிரினங்கள் இருசமபக்கஒருமை அல்லது இருபக்கச்சமச்சீர் என்று சொல்லப்படும் bilateral symmetry உடையவை. இத்தகைய இருபக்கச்சமச்சீர் உயிரினங்கள் கருவில் உருவாவதின் அடிப்படையிலேயே இவைகள் வகைபடுத்தப்பட்டுள்ளன. கிரேக்க வார்த்தைகளின் அடிப்படையிலேயே இவைகள் Protostomes and Deuterostomes எனப்பெயரிடப்பட்டுள்ளன. Protostomes என்றால் கருவில் உருவாகும் பொழுது வாய் முதலில் தோன்றும் உயிரினங்கள், Deuterostomes என்றால் ஆசன வாய் (குதம்) முதலில் தோன்றும் உயிரினங்கள். பெரும்பாலான முதுகெலும்பற்ற உயிரினங்கள் Protostomes ஆகவும், முதுகெலும்பு உள்ள மற்றும் சிலவகை முட்தோலிகளும் Deuterostomes ஆகவும் உள்ளன. ஆம் மனித கருவுருவில் முதலில் தோன்றுவது ஆசன வாய் தான், இரண்டாவதாகத்தான் வாய் உருப்பெறுகிறது. 1908 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படும் இந்த வகைபாட்டியியல் தான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
Item Type: | Article |
---|---|
Subjects: | Marine Biodiversity |
Divisions: | CMFRI-Mandapam |
Depositing User: | Dr. V Mohan |
Date Deposited: | 17 Mar 2016 04:51 |
Last Modified: | 27 Apr 2016 10:22 |
URI: | http://eprints.cmfri.org.in/id/eprint/10704 |
Actions (login required)
![]() |
View Item |